Wednesday, April 1, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாலண்டனில் பரபரப்பு சம்பவம்... பொது மக்கள் பலர் மீது கத்திக் குத்து தாக்குதல்!

லண்டனில் பரபரப்பு சம்பவம்… பொது மக்கள் பலர் மீது கத்திக் குத்து தாக்குதல்!

லண்டனில் உள்ள சுரங்க ரயில் நிலையத்திற்கு அருகே கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதம் ஏந்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர், வீடொன்றின் மீது வாகனத்தை மோதவிட்டு பலரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

36 வயதான சந்தேக நபர் பொதுமக்கள் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இன்றையதினம் (30-04-2024) காலை 7 மணிக்கு (உள்ளூர் நேரம்) மாநகர பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மற்றும் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் உட்பட அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தை அடுத்து Ilford இல் உள்ள சுரங்க ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments