Wednesday, April 1, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாலண்டனில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இந்தியருக்கு நேர்ந்த கதி!

லண்டனில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இந்தியருக்கு நேர்ந்த கதி!

பிரித்தானியாவில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லண்டனில் இந்திய வம்சாவளியினரான  25 வயதான சாகில் சர்மா தனது மனைவி மெஹக் சர்மாவுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர் மாதம் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சாகில் தனது மனைவி மெஹக்கை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் சாகில் சர்மா மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

இதனையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து கிங்க்ஸ்டன் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments