Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமரண வீட்டில் விபரீதம்; மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாப மரணம்

மரண வீட்டில் விபரீதம்; மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாப மரணம்

கம்பஹா – நிட்டம்புவஇ திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் திஹாரிய கல்கெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து அப்பகுதியில் உள்ள மரண வீட்டின் வீதியில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் மின் விளக்குகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்பி மோதியதில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மின்சாரம் தாக்கிய ஏனைய நால்வரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments