Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமரம் முறிந்து விழுந்ததில் பொலிஸாருக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்

மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸாருக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் குறித்த இருவரும் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
அநுராதபுர பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தளை பிரதேச போக்குவரத்துப் பிரிவின்
பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் மரதன்கடவல பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதே இந்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று காலை
மாத்தளையிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே
இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments