Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகளுத்துறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

களுத்துறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

களுத்துறை, மொறொந்துடுவ- பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால்
வெட்டப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மொறொந்துடுவஇ பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர்
வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மொறொந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையிலான
வாய்த்தர்க்கம் நீண்டதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் சந்தேக நபரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் மேலும் சிலருடன் பொல்ஹேன பிரதேசத்தில் உள்ள தனது
சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மொரந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments