Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகோயில் கும்பாபிஷேகத்தில் திருடிய பெண்

கோயில் கும்பாபிஷேகத்தில் திருடிய பெண்

யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அடியார்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி
கன்னாதிட்டி காளி கோயில் இந்து இளைஞர்களின் ஒத்துழைப்புடன் குறித்த பெண் ஒரு மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும், கொழும்பு வெல்லம்பிட்டியவை சேர்ந்த 27 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுது,  பெண்ணின் உள்ளாடைக்குள் இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டு,  நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments