Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த உறுப்பினர்

மத்திய மாகாண சபையின் உப தவிசாளராக இரண்டு தடவைகளும்இ அவைத் தலைவராக பதவி வகித்தவரும்,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளரும்,  25 வருடங்களுக்கும் மேலாக கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள துரை மதியுகராஜா , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலான பலதரப்பட்ட அரசியல் மற்றும் தொழிற்சங்க அனுபவத்துடன் கூடிய முன்னணி தொழிற்சங்கத் தலைவரும் அரசியல்வாதியுமான இவர், அரசியல் மற்றும் தொழிற்சங்கங்கள் குறித்த பரந்த அறிவைக் கொண்ட ஒருவர் என அவரை அறியலாம்.,  ஆங்கிலம்,  தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் பன்மொழிப் பேச்சாளரான இவர்,  ஓர் எழுத்தாளரும் கூட.

1991 இல் கண்டி மாநகர சபைக்கு அதிகூடிய வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட இவர்,  1994 ஆம் ஆண்டும் 1997 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபை உறுப்பினராகவும்இ 2001 இல் உப தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்,  2002 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments