Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாகக் கண்டெடுப்பு

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாகக் கண்டெடுப்பு

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் நேற்றைய தினம் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமற் போன நிலையில் இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

முறிகண்டி வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் றுசாந்தன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாகக் கண்டுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் நீராடுவதற்காக தனது சகோதரன் மற்றும் இரு நண்பர்களுடன் சென்றுள்ள நிலையில் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களுகும்இ பிரதேச மக்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments