Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி அஞ்சலி

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி அஞ்சலி

ஆர். சம்பந்தனின் மறைவு தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைவரையும்
துக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மறைந்த ஈழத் தமிழர்களின் மூத்த பெரும் தலைமையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்
தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தும்
வகையில் இன்று மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சின் கொடி அரைக்கம்பத்தில்
பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழரசுக்கட்சின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழரசுக்கட்சின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் அஞ்சலி பதாகையும் கட்டப்பட்டதுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

தலைவர் சம்பந்தன் ஐயா மரணமான அந்த துக்கரமான செய்தி நேற்று இரவு 11.30மணியளவில் கிடைத்தது.இந்த செய்தியானது தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைவருக்கும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் துக்கத்தினை தந்த செய்தியாகயிருக்கின்றது என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments