Monday, May 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை350 லட்சம் ரூபா பெறுமதியான ஸ்கான் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று

350 லட்சம் ரூபா பெறுமதியான ஸ்கான் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று

யாழ். போதனா வைத்தியசாலைஇ யாழ்.மருத்துவபீடம்,  சிவபூமி அறக்கட்டளை,  இணைந்து நடாத்தும் பெண்கள் தொடர்பான கருவளச் சிகிச்சை நிலையத்திற்கு கொடையாளர் சதா.மங்களேஸ்வரன்,  கலாநிதி ஆறு.திருமுருகனின் வேண்டுகோளுக்கு இணங்க (அபயம் அறக்கட்டளை ஊடாக) வழங்கிய
350 லட்சம் ரூபா பெறுமதியான ஸ்கான் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது.

சிவபூமி அறக்கட்டளைத்தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகனால் மேற்படி ஸ்கான் மெசின் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் யாழ்.மருத்துவ பீட மகப்பேற்று வைத்திய நிபுணர்கள்,  தாதியர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,  யாழ்.போதனா வைத்தியசாலை,  யாழ்.மருத்துவ பீடம், வைத்தியர்கள்,  சிவபூமி அறக்கட்டளை நிலைய கொடையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments