Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்கள் அபாயத்தில்

யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்கள் அபாயத்தில்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய
டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 30இ663 டெங்கு நோயாளர்கள்
அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்இ 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 7, 119 ஆகும்.

மேலும்,  யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 4, 004 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 3, 199 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 1, 690 டெங்கு நோயாளர்களும்,  கண்டி மாவட்டத்திலிருந்து 2, 484 டெங்கு நோயாளர்களும்,  குருணாகல் மாவட்டத்திலிருந்து 1இ321 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும்இ இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments