Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னாரில் வெடித்த பொது மக்கள் போராட்டம்

மன்னாரில் வெடித்த பொது மக்கள் போராட்டம்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவை மற்றும்
அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த ஏழை விவசாயிகள் தங்களுக்கான காணி உரிமையை கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்

மாந்தை மேற்கு பகுதியில் உள்ள சோழ மண்டலம் குளத்தின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக அரசாங்க அனுமதியுடன் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த அந்தோனியார்புரத்தை சேர்ந்த மக்களுக்கு நபருக்கு தலா இரண்டு ஏக்கர் காணி வீதம் வழங்குவதாகவும் அதன் ஊடhகவாழ்வார செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுவதாகவும் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாக்குறுதியை அடிப்படையாக கொண்டு மக்கள் எந்த ஒரு காணி ஆவணங்களும் இன்றி பலவருடங்களாக அப்பகுதியில் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக குறித்த காணிகளை அந்தோனியார்புர மக்களுக்கு வழங்காது வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளடங்களாக வவுனியா,  கொழும்பு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர்களால்
காணிகளை பண்படுத்து செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான காணியை தாங்கள் பூர்விகமாக பயன்படுத்திய காணியை தங்களுக்கு வழங்காது வெளிநாட்டை சேர்ந்த நபர்களிடமும்,  பணம்படைத்தவர்களிடம் பணம் பெற்று கொண்டு
காணி சீர்திருந்த ஆணைக்குழுவினர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிவகரன் தலைமையில் குறித்த போராட்டம் இடம் பெற்றுள்ளது

குறித்த போராட்டத்தில் இந்த நாட்டில் ஏழைகளுக்கு நீதியே இல்லையா, அரச அதிகாரிகளே காணி மாபியாக்களின் கூட்டாளிகளா, அரச அதிகாரிகளே துரோகத்திற்கு துணைபோகாதீர்கள்,  தமிழ் அரசியல் வாதிகளே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றீர்களா போன்ற பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டத்தின் இறுதியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரனிடம் போராட்டகாரர்கள் கையளித்த நிலையில் இவ்வாறான காணி தொடர்பான பிணக்குகளை
நீண்ட நாட்கள் முடிவுறுத்தாமல் வைத்திருக்க முடியாது எனவும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலருக்கு காணி இல்லாத நிலையில் வேறு மாவட்டத்தையும் வெளிநாட்டையும் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்குவதை ஏற்க முடியாது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments