Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே விமான விபத்து

நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே விமான விபத்து

நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானமே இவ்வாறு விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓடுதளத்தில் சென்றபோதே கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானது.

ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

விமானத்தில் இருந்த 19 பேரில் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விமான விபத்தை அடுத்து காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments