Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகடிதம் எழுதி வைத்துவிட்டு பல்கலை மாணவன் எடுத்த விபரீத முடிவு

கடிதம் எழுதி வைத்துவிட்டு பல்கலை மாணவன் எடுத்த விபரீத முடிவு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான பிரிவில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்று வந்த 22 வயது மாணவரொருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடுகன்னாவ,  பிரிமத்தலாவ,  பரகடவெல்ல,  கிராகமவில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்திலே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில்,  மாணவனின் அறையில் ‘அம்மா… கவலைப்படாதே ‘நான் கிளம்புகிறேன்’ என்று எழுதப்பட்ட கடிதமொன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவரது தாயார் பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் எனவும்இ நான்கு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்த குறித்த மாணவன் கையடக்கத் தொலைபேசிகளில் அடிமையாகியிருந்தமையும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தினத்தன்று மாணவனின் அறைக்கு பெற்றோர் சென்றபோது அவர் அங்கு இல்லை எனவும்,  இதனையடுத்து மாணவனின் மூத்த சகோதரர் கடுகன்னாவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் வந்து சோதனை செய்தபோதுஇ ​​தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முட்களுடன் கூடிய மரம் என்பதால் உடலில் தழும்புகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கசுன் ஏகநாயக்கவினால் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை கருத்திற்கொண்ட மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன,  கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாக இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments