Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஒக்டோபர் 14 இல் 'விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வு'

ஒக்டோபர் 14 இல் ‘விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வு’

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கு எதிரான வழக்கில்
‘விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வு’ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ந
டைபெறவுள்ளது.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று(30) விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோதே விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வுக்கான திகதி
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  இந்த வழக்கை விரைந்து முடிவுறுத்துவதற்கு வசதியாக மாவை சேனாதிராஜா,  சிவஞானம் சிறீதரன்,  சண்முகம் குகதாசன்,  சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகிய 4 எதிராளிகள் இன்று தமது பதில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

ஏனைய நான்கு எதிராளிகளான எம்.ஏ.சுமந்திரன், குலநாயகம்,  ப.சத்தியலிங்கம்,  இரத்தினவடிவேல் ஆகியோர் சார்பிலான பதில் மனுக்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments