மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பாதுக்க, பொரேகெதர பிரதேசத்தில் வீடொன்றின் மீது பாரிய பலா மரமொன்று வீழ்ந்ததில் ஒரு குழந்தை உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நேற்று (05) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.
மரம் முறிந்து வீழ்ந்ததில் குறித்த வீடு முற்றாக இடிந்துள்ளதுடன், வீட்டினருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனர்த்தத்தில் காயமடைந்த பத்து வயது பிள்ளைஇ கணவன்இ மனைவி மற்றும் அயலகப் பெண் ஆகியோர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்இ அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

