Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை

வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை மன்னார் நீதவான் நீதிமன்றம் சரீரப் பிணையில் விடுவித்துள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வைத்தியர் அர்ச்சுனா அத்துமீறி நுழைந்து காணொளிகளை பதிவு செய்தமை, கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,
வைத்தியரை மறுநாள் சனிக்கிழமை கைது செய்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர், மன்னார் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை,  வைத்தியரை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதனிடையே குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அர்ச்சுனாவை இரண்டு சரீரப் பிணையில் செல்ல மன்னார் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments