Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை16 தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது

16 தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட நான்கு கோடியே நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான  16 தங்க பிஸ்கட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய வர்த்தகரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (13) செவ்வாய்க்கிழமை காலை 06.05 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை
வந்தடைந்துள்ளார்.

இதனையடுத்து,  சந்தேக நபர் விமான நிலையத்தின் அனைத்து சோதனை நடவடிக்கைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய அதிகாரிகளால் மீண்டும் சோதனைக்குட்படுதப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து தங்க பிஸ்கட்டுகள் அடங்கிய 2 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments