Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஆன்மிகம்வவுனியாவில் லட்சக்கணக்கில் ஏலம் போன மாம்பழம்

வவுனியாவில் லட்சக்கணக்கில் ஏலம் போன மாம்பழம்

வவுனியாஇ உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த
மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழமொன்று 2, 85, 000 ரூபாய்க்கு ஏலத்திற்கு
விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாளான நேற்று(14) மாம்பழத் திருவிழா நடைபெற்றது.

இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழமொன்றே ஆலயத்தின் வளர்ச்சி நிதிக்காக இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டது.

இந்நிலையில் பலத்த போட்டிக்கு மத்தியில் குறித்த மாம்பழத்தை உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ஒருவர் 2, 85, 000 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments