Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் அலுவலகங்களை தயார்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதச் சின்னங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments