Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவெற்றி திலகமிட்டு யாழில் தமிழ் பொதுவேட்பாளருக்கு வரவேற்பு

வெற்றி திலகமிட்டு யாழில் தமிழ் பொதுவேட்பாளருக்கு வரவேற்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் தமிழ் அரசியல் தரப்பினர் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டு முயற்சியால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொதுவேட்பாளரின் ‘நமக்காக நாம்’ தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று(23) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து
ஆரம்பமானது.

அந்தவகையில்,  தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள அரியநேத்திரன் உள்ளிட்ட குழுவினர் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு விநியோகம் செய்தனர்.

இந்த பயணம் தொடர்ந்து பொலிகண்டி கிழக்கு,  பொலிகண்டி மேற்கு,  வல்வெட்டித்துறை,  ஆதிகோவிலடி,  தொண்டைமாணாறு,  வளலாய்,  பலாலி,  தையிட்டி,  காங்கேசன்துறை ஆகிய இடங்களின் ஊடாக நகரவுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments