Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசஜித் வழங்கிய வாக்குறுதி

சஜித் வழங்கிய வாக்குறுதி

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும்,  ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்இ மைதானத்துடன் யாழ்ப்பாண இளைஞர்களுக்கான விளையாட்டு மேம்பாட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தின் போது கிரிக்கெட் மைதானம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய அவர்இ இந்த உரையாடல் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான யோசனைக்கு வழிவகுத்ததாக தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் ஆய்வு செய்ததாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் பாரிய காணி கையாளப்படுவதை அறிந்ததாக தெரிவித்த அவர்,  காணி ஒதுக்கப்பட்ட போதிலும்,  கிரிக்கெட் மைதானமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments