Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅழகுப்பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்

அழகுப்பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்

சவர்க்காரங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கு ளுடுளு சான்றிதழ் கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவரா தெரிவித்துள்ளார்.

இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படிஇ இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்
சவர்க்காரங்களின் வுகுஆ பெறுமதி 78 ஆக இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும்,  நாட்டில் உள்ள பிரதான சவர்க்கார உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளின் சவர்க்காரம் நுகர்வோர் விவகார அதிகாரசபை பரிசோதித்த போது அதன் TFM  பெறுமதி 63 என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிறுவனமும் ஏனைய நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட TFM  பெறுமதியுடன் சவர்க்கார உற்பத்தி செய்கின்றனவா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குழந்தையின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM  மதிப்புடைய சவர்க்காரம் தயாரித்ததாக நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிறுவனத்தின் உற்பத்திக்கு நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments