Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதி தனது தேர்தல் கடமையை நிறைவேற்றினார்

ஜனாதிபதி தனது தேர்தல் கடமையை நிறைவேற்றினார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) காலை கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களித்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி,  அனைவரும் அமைதியாக செயற்பட்டு ஒன்றிணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும்,  இன்று நடைபெறும் தேர்தல் இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தமக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  நாட்டில் அமைதியான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடாத்த முடிந்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு  தேர்தலில் பங்குபற்றிய அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் நன்றி தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments