ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
அநுர குமார திஸாநாயக்க 19, 185 வாக்குகளையும்,ரணில் விக்கிரமசிங்க 6, 641 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 4, 675 வாக்குகளையும், நாமல் ராஜபக்ஷ 500 வாக்குகளையும் , திலித் ஜயவீர 251 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

