Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமக்கள் ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும்

மக்கள் ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும்

ஜனநாய தமிழ்த்தேசியக்கூட்டணி தேர்தலில் பலமானதொரு கட்சியாக மக்கள்
ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஜனநாய தமிழ்த்தேசியக்கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் தேசிய பரப்பில் பலமான கட்சியாக மக்கள் எமக்கு ஆதரவு தருகின்ற வேளை முன்புபோல் இல்லாது தமிழ் மக்களின் ஒற்றுமையாக செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்ப்போம் தற்போதைய அரசாங்கம் தமிழ்த்தேசிய இனப்பிரச்சனைக்கு எவ்வாறு செயற்படும் என்பது தெரியாது என்றும் அவர் தெரிவித்தார் .

மேலும் ஜனாதிபதியுடன் பேசக்கூடிய நெருக்கம் இருக்கு என்றும் பேசி நியாயமான தீர்வைப்பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments