Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉக்ரைனிற்கு எதிராக போடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள யாழ். இளைஞர்கள்: முற்றாக மறுக்கும் ரஷ்யா

உக்ரைனிற்கு எதிராக போடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள யாழ். இளைஞர்கள்: முற்றாக மறுக்கும் ரஷ்யா

இலங்கை – யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போடுமாறு
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என
இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் – பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள்
உக்ரைனிற்கு எதிராக போரிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான செய்தி குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கவனம் செலுத்தியது.

இவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை அடிப்படையற்றவை என்பதை தூதரகம் வலியுறுத்த விரும்புகின்றது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.

இந்த தகவல்களின் நோக்கம் இலங்கை – ரஸ்யா இடையிலான பாரம்பரிய நட்புறவை
சீர்குலைப்பதாகும். எங்கள் நாட்டிற்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டவர்களையும்,  ரஸ்ய அதிகாரிகள் மதிக்கின்றனர். அவர்களின் விருப்பத்திற்குஇ தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை வழங்க தயாராகவுள்ளனர்.

ரஸ்யாவில் தங்கியிருக்கின்ற இலங்கையர்கள் தொடர்பான விடயத்தினைஇ மொஸ்கோவில் உள்ள ரஸ்யாவிற்கான இலங்கை தூதரகமே கையாள்கின்றது என்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.

நேர்மையற்ற வேலைவாய்ப்பு முகவர்கள் இலங்கையர்களை ரஸ்யாவிற்கு அனுப்புவது குறித்து தூதரகத்திற்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதேவேளை இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கோரப்பட்டால் அதற்கு உதவுவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments