Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதி அநுரவின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் நாளை

ஜனாதிபதி அநுரவின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் நாளை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின்
கொள்கை பிரகடனம் மீதான விவாதம் நாளையும்இ நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

நாளை (03) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இந்தநிலையில்,  அண்மையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை நாளைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நாளை மறுதினமும் கொள்கை பிரகடனம் தொடர்பான பிரேரணை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு,  பின்னர் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல்
திணைக்களம் அறிவித்துள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments