Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் ஹெரோயினை ஊசி மூலம் உடம்பினுள் செலுத்திய இளைஞன் மரணம்

யாழில் ஹெரோயினை ஊசி மூலம் உடம்பினுள் செலுத்திய இளைஞன் மரணம்

யாழில் அதிக ஹெரோயின் பாவனையால் இளைஞர் ஒருவர் நேற்றையதினம்
உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 23ஆம் திகதி நண்பனின் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார். 24ஆம் திகதி அவரை பார்வையிட்டவேளை மயக்கநிலையில் காணப்பட்டார்.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உட்செலுத்தியதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments