Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாமலுக்கு எதிராக வழக்கிலிருந்து விலகிய உயர் நீதிமன்ற நீதிபதி

நாமலுக்கு எதிராக வழக்கிலிருந்து விலகிய உயர் நீதிமன்ற நீதிபதி

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன,  வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சனத் பாலசூரிய மற்றும் பொத்தல ஜெயந்த என்ற இரண்டு நபர்கள் தனக்கு எதிராக
முகநூலில் பதிவிட்ட இரண்டு பதிவுகளைத் தொடர்ந்து,  இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி,  வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு பொருத்தமான நீதிபதியை
நியமிக்க,  வழக்கு கொழும்பு தலைமை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவிடம் பரிந்துரைக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் சமீபத்தில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments