Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசி.ஐ.டி.யில் ஆஜரான முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்

சி.ஐ.டி.யில் ஆஜரான முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று காலை
குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில்
நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவில்
பணியாற்றிய ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் இறந்தமை தொடர்பாக
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று முன்னியலையாகினார்.

இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் அமைச்சருக்கு
அழைப்பு விடுக்கப்பட்டதாக நேற்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவின்
மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

வழக்கு தொடர்பான விபரங்கள் முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற
சந்தேகத்தின் காரணமாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக
அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேர்
கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments