Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசட்டவிரோத மணல் அகழ்வு இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்

சட்டவிரோத மணல் அகழ்வு இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்

கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பிரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை கடற்றொழில் மற்றும் நீரியல்,  கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி, கரைச்சி,  பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பகுதிக்குட்பட்ட பல்வேறு
பிரதேசங்களிலும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் தொடர்ந்து
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகளால்
அமைச்சருக்கு முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் பெருமளவான வயல் நிலங்கள்இ நீர்ப்பாசன கட்டுமானங்கள் என்பன
சேதமடைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே நேற்றையதினம் பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குஞ்சுப்பிரந்தன் முதல் குடமுருட்டி வரை மணல் அகழ்வது தொடர்பில் சம்பவ இடத்தை
பார்வையிட்டதுடன் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து,
சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் உடனிருந்தார் என்பது
குறிப்பிடதக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments