மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று
அவிசாவளை பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளாகி உள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலைலிருந்து கொழும்பை நோக்கி பயணிகளுடன் பயணித்த பேருந்து,
ஒருகொடவத்தையில் சாலையோரம் தொடராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த
கனரக வாகனங்கள் மீது பின்புறமாக மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 10 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

