ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச
விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கஇ ஜூன் 11 முதல் 13 வரையில், ஜெர்மனிக்கு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது போது ஜனாதிபதி, ஜெர்மனியின் ஜனாதிபதிஇ சான்சலர், கூட்டாட்சி
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரச பிரதானிகளுடன் இருதரப்பு
கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடுகள் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட இருநாட்டினதும் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் புதிய வழிகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.

