நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் (13)நல்லூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்படி தமிழ் மக்கள் கூட்டணியின் தவிசாளர் வேட்பாளராக மயூரன் சபையில்
முன்மொழியப்பட்டார்.
இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் கணேஸ் தன்னுடைய
கட்சியின் நிலைபாட்டை சபையில் தெரிவித்து குறித்த தவிசாளர் தெரிவை
புறக்கணித்து வெளியேறியிருந்தது.
இந்நிலையில் வேறு போட்டியாளர் இன்மையால் தவிசாளராக மயூரனே
தேர்ந்தெடுக்கபட்டார்.
இதன்படி சபையின் தமிழரசுக் கட்சிஇ தமிழ் மக்கள் கூட்டணிஇ தேசிய மக்கள் சக்தி
உள்ளிட்ட கட்சிகளின் 19 உதுப்பினர்களினதும் ஏக விருப்பின் பெயரில் தவிசாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்னிலையில் உப தவிசாளராக தமிழரசுக் கட்சியின் இராஜமனோகரன் ஜெயகரனும்
தெரிவு செய்யப்பட்டார்.
20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 7 ஆசனங்களையும்,
தமிழ் மக்கள் கூட்டணி 6 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், சங்கு 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஓர் ஆசனத்தையும் பெற்றிருந்தன.
இதனடிப்படையில் சபையில் பிரசன்னமாகி இருந்த குறித்த கட்சிகளின்
உறுப்பினர்களின் ஏக விருப்புடன் தவிசாளராக மயூரன் தெரிவகியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

