Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉதய கம்மன்பிலவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை

உதய கம்மன்பிலவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை

முன்னாள் அமைச்சரும் பிவித்துர ஹெல உறுமய கட்சியின் தலைவருமான
உதய கம்மன்பில தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய ஜெர்மனி விஜயம் தொடர்பில்
வெளியிட்ட கருத்துக்கள் குறித்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரஇ ஜெர்மனியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களை
சந்தித்தார் என ஊடகங்களிடம் கூறியதாகவும் இந்த கூற்றுக்கள் குறித்து
விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விரைவில் உதய கம்மன்பிலவிடம் விசாரணை நடத்தப்பட
உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது,
பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான தகவல்களை
வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி
நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் ஜி. சுபாஷ் சமிந்த ரோஷன்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக
தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments