Friday, August 14, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபாதுகாப்பற்ற முறையில் நடமாடிய 21 சிறுவர்களை பொறுப்பேற்பு

பாதுகாப்பற்ற முறையில் நடமாடிய 21 சிறுவர்களை பொறுப்பேற்பு

யாசகம் பெறும் மற்றும் பொருட்களை விற்பனை செய்து பாதுகாப்பற்ற முறையில்
நடமாடும் சிறுவர்களை பொறுப்பேற்றுஇ அவர்களை உரிய பாதுகாவலர்களிம்
ஒப்படைப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரினால்
மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு வடக்கு,  கொழும்பு தெற்கு,  மத்திய கொழும்பு, நுகேகொடை, கம்பஹா,
பாணந்துறை களனி, நீர்கொழும்பு, கல்கிஸ்ஸ, களுத்துறை,  தங்காலை,
அனுராதபுரம்,  கண்டிஇ குருநாகல்இ,  சிலாபம்,  இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக
தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி மக்கள் கூடுதலாக வசிக்கும்
பிரதேசங்களில் மற்றும் பொதுமக்கள் அதிகமாக திறளும் விற்பனை நிலையங்கள்,
சமிக்ஞை விளக்குகள் காணப்படும் இடங்களை உள்ளடக்கி இச்சுற்றிவளைப்புகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அங்கு யாசகம் பெறும் மற்றும் பொருட்களை விற்பனை செய்து பாதுகாப்பற்ற முறையில் நடமாடிய 21 சிறுவர்களை பொறுப்பேற்று அவர்களை தகுதியான பாதுகாவலர்களிடம் ஒப்படைப்பதற்கு பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments