Wednesday, August 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்:முழு பொறுப்பையும் நீதியமைச்சே ஏற்க வேண்டும்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்:முழு பொறுப்பையும் நீதியமைச்சே ஏற்க வேண்டும்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமைக்கான
முழு பொறுப்பையும் நீதியமைச்சே ஏற்க வேண்டும் என முன்னாள் நீதியமைச்சர்
விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிறைக்கைதிகளின் பெயர்கள் மற்றும் பரிந்துரைகளுடன்,  ஜனாதிபதிக்கு
நீதியமைச்சினால் அனுப்பப்பட்ட கடிதத்தில்இ பல குறைபாடுகள் உள்ளதாகவும்
தெரிவித்தார்.

நீதியமைச்சினால், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்த குறித்த கடிதத்தில்,  அபராதம்
செலுத்த முடியாதமையால் தண்டனை பெறுபவர்களுக்கு பொதுமன்னிப்பு
அளிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

எனினும்இ அவ்வாறான நபருக்கு எதிராக வேறு ஏதேனும் வழக்குகள் இருந்தால்,
அவரை விடுவிக்கக் கூடாது என்ற நிபந்தனை மற்றும் அளவுகோல்கள்இ அதில்
உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

அதனடிப்படையிலேயே,  20 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த
நபரொருவரும் விடுதலையாகியுள்ளார் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments