கிளிநொச்சி 155 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில்
33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார் .
குறித்த பகுதியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிய வாகனமும் மோட்டார் சைக்கிளும்
மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளிலில் இருவர் பயணித்த நிலையில் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.மற்றையவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி
மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி விநாயகபுரத்தைச்சேர்ந்த 33வயதான
மூன்று பிள்ளைகளின் தந்தை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

