Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைதுசெய்து
நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது.

சஜின் வாஸ் குணவர்தன 2010 – 2012 காலப்பகுதிகளில் அரசாங்கத்துக்கு 369 இலட்சம் ரூபா வருமான வரி செலுத்தவில்லை என கூறி,  சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் சஜின் வாஸ் குணவர்தன இந்த வழக்கு மீதான விசாரணைகளுக்காக
நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான் சஜின் வாஸ் குணவர்தனவை கைதுசெய்து
நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments