Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசர்வதேச நீதி கோரி வடக்கு, கிழக்கில் போராட்டம்

சர்வதேச நீதி கோரி வடக்கு, கிழக்கில் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி இன்றைய தினம் சனிக்கிழமை
வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிட்டு பூங்கா முன்றலில் இருந்து இன்றைய தினம் காலை 11 மணியளவில் பேரணியாக சென்று,  மனித புதைகுழிகள் காணப்படும் செம்மணி பகுதிக்கு அண்மையாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில்,  பல்கலைக்கழக மாணவர்கள் ,  அரசியல் கட்சிகள் ,
பொது அமைப்புக்கள் , உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments