Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் இளம் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென இன்று உயிரிழந்துள்ளார் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை – கலட்டிப் பகுதியைச் சேர்ந்த நடராசா ஜெயக்குமார் (வயது- 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த குடும்பஸ்தர் இன்று காலை உடல் சுகயீனம் காரணமாக படுத்திருந்தார்.
இந்த நிலையில் அவர் அசைவற்று காணப்பட்டதால் குடும்பத்தினர் அவரை
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியசாலையில் அவரைப் பரிசோதித்த வேளையில் அவர் ஏற்கனவே
உயிரிழந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments