மத்திய அதிவேக வீதியில் நேற்று (02) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறி ஒன்றும் பவுசர் வாகனம் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

