Sunday, March 22, 2026
https://thaaitv.com/
Homeஆன்மிகம்வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா ஆரம்பம்

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா ஆரம்பம்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா
இன்று இடம்பெற்ற விசேட பூசைகள், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார் திருவிழாவிற்கான கிரியைகளை மேற்கொண்டுள்ளனர்.

வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவில் இரண்டாம் நாளான நாளை
திங்கட்கிழமை முதல் 7 ம் திருவிழாவான 27.09.2025 வரை உள்வீதியுலாவும்,
28.09.2025 வெளிவீதியில் ஞாயிறுக்கிழமை குருக்கட்டு விநாயகர் தரிசனமும்,
29.09.2025 திங்கட்கிழமை வெண்ணைத் திருவிழாவும்,  30.09.2025 செவ்வாய்க்கிழமை துகில் திருவிழாவும்,  01.10.2025 புதன்கிழமை பாம்பு திருவிழாவும்,  02.10.2025 வியாழக்கிழமை கம்சன் போர் திருவிழாவும்,  03.10.2025 வெள்ளிக்கிழமை வேட்டை திருவிழாவும்,  04.10.2025 சனிக்கிழமை சப்பறத்திருவிழாவும்,  05.10.2025 ஞாயிறுக்கிழமை தேர்த்திருவிழாவும்,  06.10.2025 திங்கட்கிழமை சமுத்திர தீர்த்த திருவிழாவும்,  07.10.2025 செவ்வாய்க்கிழமை பட்டுத்தீர்த்த திருவிழாவும்,  08.10.2025 ஆஞ்சநேயர் மடையும் இடம் பெறவுள்ளது.
திருவிழாவிற்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி
அலுவலகமும்இ பருத்தித்துறை பிரதேச சபையும் இணைந்து மேற்கொண்டுள்ளன.

மேலும் நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் தலமையிலும்,
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் ஏனைய பணிகளையும் மேற்கொண்டு
வருகின்றனர்.

மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார்
மேற்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments