Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் 05வது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்

யாழில் 05வது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்
இன்று 05வது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது.

குறித்த போராட்டம் யாழ்.செம்மணியில் கடந்த 25ம் திகதி ஆரம்பமாகிய நிலையில்
எதிர்வரும் 01ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்றைய போராட்டத்தில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த பொது அமைப்புகள்
முஸ்லீம் மக்கள் சிலர் எனப் பலரும் இணைந்து கொண்டனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும்,  உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில்இ வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும்
பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில்,  போராட்டத்தின் ஆரம்பத்தில்
அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டம்
ஆரம்பமானது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments