Sunday, November 23, 2025
https://thaaitv.com/
Homeஇந்தியாஇந்தியாவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 20 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 20 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் பேருந்து ஒன்று  தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்றிரவு வியாழக்கிழமை(23) பேருந்து புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 42 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் இன்று(24) அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் பேருந்தில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தீ மளமளவென பஸ்ஸின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதையடுத்து, பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றுள்ளனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர். ஆனாலும், எஞ்சிய பயணிகளில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பயணிகள் பலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments