Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொழும்பில் 10 எரிவாயு தோட்டாக்கள் மீட்பு

கொழும்பில் 10 எரிவாயு தோட்டாக்கள் மீட்பு

போராட்டங்களின்போது கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும்
10 எரிவாயு தோட்டாக்கள் கொண்ட ஒரு பையொன்று கொழும்பு 7, ப்ளவர் பாதையிலுள்ள கொமன் கொபி ஹவுஸ் கட்டிடத்தின் கூரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கறுவாத்தோட்ட பொலிஸாருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் குறித்த
எரிவாயு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது
பாதுகாப்புப் படையினரால் கொண்டு வரப்பட்ட எரிவாயு தோட்டாக்கள்
போராட்டக்காரர்களால் கட்டிடத்திலேயே விடப்பட்டிருக்கலாம் என்று
சந்தேகிக்கப்படுவதாக தலைமை பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments