Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மோதிய மற்றுமொரு பேருந்து

நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மோதிய மற்றுமொரு பேருந்து

நிறுத்தப்பட்ட பேருந்து மீது பின்னால் சென்ற மற்றுமொரு பேருந்து மோதி ஏற்பட்ட
கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றை
மற்றுமொரு தனியார் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக
நிறுத்தப்பட்டிருந்தபோது,  பின்னால் வந்த மற்றொரு தனியார் பேருந்து
நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,  சிகிச்சை பலனின்றி மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னால் வந்த பேருந்து அதிவேகமாக பயணித்ததால் இந்த விபத்து இடம்பெற்றதாக
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments