சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் அமைந்துள்ள
வீடு ஒன்றில் நேற்று அதிகாலை 15 பவுண் நகை திருடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வீட்டில் வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வருகை தந்திருந்த நிலையில்
குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.

