Monday, December 15, 2025
https://thaaitv.com/
Homeஇலங்கைஜெனரேட்டரில் கசிந்த விசவாயுவால் பறிபோன குடும்பப்பெண்ணின் உயிர்

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயுவால் பறிபோன குடும்பப்பெண்ணின் உயிர்

ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில்
உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம்
பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று(6) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5 பிரிவு புதிய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை(4) இரவு
இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் இருந்த தாய் தந்தை மகள் ஆகியோரும் இந்த விபத்தில்
பாதிக்கப்பட்டவர்களாவர்.

வழமை போன்று தனது பெற்றோர்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை(5) காலை
எழும்பவில்லை என சந்தேகமடைந்த மகள் உடனடியாக தனது உறவினர்களுக்கு
அறிவித்துள்ளார்.

இதன்போது குறித்த வீட்டில் இருந்த ஜெனரேட்டரில் இருந்து கசிந்த வாயுவினால்
ஏதோ இடம்பெற்றுள்ளதை உணர்ந்த நிலையில் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.

இதன்போது 54 வயதுடைய குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

காபன் மொனொக்சைட் காற்றுடன் கலந்து நஞ்சாகியதால் அதை சுவாசித்த நிலையில் குறித்த பெண்ணின் உயிரிழப்பு சம்பவித்துள்ளதாக தெரிவித்து மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதில் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தை மகள் ஆகியோர் கல்முனை
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம்
தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments